Every month 1st and 15th shipped to your address :
" இயற்கையாளன் தவம் " இவனது இயற்ப்பெயர் தவமுருகன் .
" உரத்தூர் ஜாம் ஜாம்தார் பட்டம் " இவன் பிறந்து ,வளர்ந்து வாழும் கிராமம் .
இப்போது கி.பி 21 ஆம் நூற்றாண்டு உலகமே நமது உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது . ஆனால் இன்றும் இவன் பிறந்த ஊரில் ஒரு டீ கடை கூட இல்லாத நிலைமை . இவன் வறுமையின் விந்தில் பிறந்தவன் என்று கூட சொல்லலாம் . இவனுக்கு 4 சகோதரிகள் .
சிறுவயதில் இருந்தே அரசின் பள்ளி விடுதிகளில் தங்கி பயின்றதால் இவனுக்கு பாசத்தின் அன்பு தெரியும் , அரவணைப்பின் அருமை புரியும் .அந்த சிறுவயதில் பள்ளியிலும் விடுதியிலும் பிறரால் உண்டாகும் துன்பங்களை . கற்கண்டாய் தன கடைவாயில் போட்டு மென்று உமிழ்ந்து விடுவான் .உலகத்தை என்றும் இவன் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை . காரணம் இவனுக்கு அமைந்த ஆசிரியர்கள் அப்படி .
தாய் , தந்தை இவனை ஒரு போதும் திட்டியதில்லை . இவன் தந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து மிக பெரிய அனுபவம் பெற்றவர் . பலர் பல பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு இவரை அணுகினாலும் இவர் ஆலோசனை கேட்கும் ஒரே நபர் தவம் . முருகன் சிவபெருமானுக்கு போதனை செய்தான் . இந்த தவமுருகன் தன்
தந்தைக்கே ஆலோசனை சொல்லும் ஆற்றல் படைத்தவனானான் .
இவன் சகோதரிகள் தன் தம்பியை எப்போதும் பாசத்தின் பிணைப்பிலையே வைத்திருப்பார்கள் .
பெற்றோர்கள் , சகோதரிகள் , ஆசிரியர்கள் மூவரும் சிறந்தவர்களாக , கடவுள் வாரங்களாக இவனுக்கு அமைந்ததால் தான் இன்று இவனால் பல வெற்றிகளை நோக்கி நடைபோட முடிகிறது . இவன் உறவுகளை ஒரு போதும் மறப்பதில்லை . தன் கடமையை சரியாக செய்து வருகிறான் என்று உறவுகள் சொல்லும் அளவிற்கு வாழ்ந்து வருகிறான் .
இவனை இந்த உலகத்தில் இருந்து ஒரு வேறுபட்ட மனிதனாக யார் மாற்றியிருக்க கூடும் ..!. வேறு யார் இவன் கற்றுக்கொண்ட யோகா தான் .
யோகாசனங்களில் முதல் பத்மாசனம் முதல் , இறுதி சிரசாசனம் , சாவாசனம் வரை கற்றுக்கொண்டவன் . தன் கற்றுகொன்ண்ட ஆசனங்களால் தன் மனைவிக்கு சுய பிரசவத்தை உருவாக்க முடியும் என்று உறுதிபட சொல்கிறவன் . இவனுக்கு பிடிக்காத ஒரே செயல் மருந்துகளையும் , மருத்துவ மனைகளையும் தேடி போவது .
அதனால் , உடலை ஆரோக்கியாமாக வைத்துக்கொள்வதில் தான் இவனது முழு கவனமும் இருக்கும் .
" உடல் தான் முதல் மூலதனம்
ஆரோக்கியமான மனிதன் தான்
உண்மையான பணக்காரன் . "
- தவம் .
இவனை வழிநடத்தி செல்லும் இன்னொரு மிக பெரிய சக்தி இவன் வாசிக்கும் புத்தகம் தான் . புத்தகம் வாசிப்பதில் தொடங்கி இவனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறான் . புத்தகத்தின் பெயர் " தவத்தின் தாகம் " .தன்னை தவமிருந்து இன்றெடுத்த தாய் தந்தையருக்கு பெருமை சேர்த்து விட்டோம் என்று நம்பினான் . தன் புத்தக வெளியீட்டு விழாவில் தன் தந்தை சிந்திய ஆனந்த கண்ணீரை பார்த்து .
இவற்றை எல்லாம் தாண்டி இவனது வெற்றி என்னவாக இருந்திருக்க கூடும் . ஆச்சரியத்தோடு தொடர்ந்து படிங்கள் ....!
- 💚இயற்கையாளன் தவம்